‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

  • November 25, 2022 / 05:24 PM IST

சந்தானம் நடிப்பில் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’. ரியா சுமன் இந்த படத்தில் நாயகியாக நடித்த இருக்கிறார் . இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது . இதில் பங்கேற்று பேசிய நடிகர் சந்தானம் பேசும்போது, “இந்த ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், அதில் பல மாற்றங்களை இயக்குநர் செய்துள்ளார்.

தெலுங்கு ஒரிஜினல் படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா – மகன் கதை இருக்கும். அதை அந்த படத்தில் முழுமையாக பயன்படுத்தவில்லை. அதை இந்த படத்தில் இயக்குனர் எடுத்து வந்து இருக்கிறார். அதனால் இந்த படம் புதுவிதமாக இருக்கும்.


என்னை கொஞ்சம்கூட காமெடி செய்ய விடலை. அதுபோக இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்றுக் கொண்டேன், படத்தில் சில ஆக்ஷன் காட்சிகளை இயக்குநர் வைத்துள்ளார். அது அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்து இருந்தார் .

இந்நிலையில் “ஏஜெண்ட் கண்ணாயிரம் ” படம் இன்று வெளியாகி உள்ளது . தற்போது படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர் .

 

Read Today's Latest Reviews Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus