“காபி வித் காதல் ” படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் விமர்சனம் !

  • November 4, 2022 / 06:05 PM IST

முறை மாமன் , முறை மாப்பிள்ளை , உள்ளத்தை அள்ளித்தா , அருனாச்சாலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி .இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரண்மனை 3. இந்த படத்தை தொடர்ந்து ஜெய் , ஜிவா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை‌ வைத்து காபி வித் காதல் படத்தை இயக்கி உள்ளார் . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ,நடிகை மாளவிகா , ஐஸ்வர்யா , , திவ்ய தர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர் . பொதுவாக சுந்தர்.சி படம் கலகலப்பாக நகைச்சுவையுடன் இருக்கும் . ஆனால் இந்த படத்தின் தலைப்பே ‌”காபி வித் காதல் ” என்று சற்று வித்தியாசமாக உள்ளது . அதனால் இந்த படத்தில் காதலுக்கும் பஞ்சம் இருக்காது என்று நம்பபடுகிறது .

இந்நிலையில் தற்போது படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் .

 

Read Today's Latest Reviews Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus