இரும்புத்திரை படத்திற்காக நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?
November 3, 2022 / 09:54 AM IST
|Follow Us
பி.எஸ்.மித்ரன் இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் டெக்னோ-திரில்லர் திரைப்படம் இரும்புத்திரை. இப்படத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா ரூத் பிரபு ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார் . இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்தது. ஒரு இராணுவ அதிகாரியைச் சுற்றி கதை மையமாக இருந்தது மேலும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடிய பிறகு ஹேக்கர்கள் கும்பலை வேட்டையாடத் துவங்குகிறார் விஷால் .
இந்தத் திரைப்படம் 11 மே 2018 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது .மேலும் நடிகர்களின் நடிப்பு, எழுத்து, இயக்கம், அதிரடி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைப் பாராட்டி விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றது இந்த படம் . இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100-நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்தது மற்றும் 2018 ஆம் ஆண்டின் ஏழாவது-அதிக வசூல் தமிழ்ப் படமாக அமைந்தது.
நடிகர் விஷாலின் திரை பயணத்தில் இந்த படம் முக்கியமான படமாக அமைந்தது . தமிழ் சினிமாவில் இது வரை பேசாத புதிய தொழில்நுட்ப ஸ்கேம் பற்றி இந்த படம் பேசியது.இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகை சமந்தா 1.25 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.