கன்னட சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி, நடித்திருக்கும் புதிய படமான ‘காந்தாரா’ கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னட மொழியில் ரிலீஸானது.
இதில் மிக முக்கிய ரோல்களில் சப்தமி கௌடா, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இதற்கு அர்விந்த்.எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், இப்படத்தை பார்த்து ரசித்த பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ட்விட்டரில் ‘காந்தாரா’ படக்குழுவினரை பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.