ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
இந்நிலையில் 78 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று முதல் முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் அமுதவாணன் .
இந்நிலையில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது . ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த டாஸ்க் இது தான் . போட்டியாளர்களின் குடும்பத்தினர் இந்த டாஸ்கில் பங்கேற்பார்கள் . அந்த வகையில் இன்று நடைபெற உள்ள பிரீஸ் டாஸ்கில் மைனாவின் கணவர் , அமுதவானின் மனைவி மற்றும் குழந்தைகள் , ஷிவினின் தோழிகள் பங்கேற்றுள்ளனர் .
இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் மைனாவின் கணவர் யோகி மனைவியிடம் இந்த விளையாட்டுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட … சரியான நேரத்தில் நீ குரல் கொடுக்கவில்லை என் கூறுகிறார் . தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது .
#Day79 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ptSZcB3yIU
— Vijay Television (@vijaytelevision) December 27, 2022