ஐதராபாத் டூ சென்னை அஜித்தின் பைக் ரைட்…!

  • April 22, 2020 / 10:32 AM IST

ஐதராபாத் டூ சென்னைக்கு தல தனியா என்னுடைய பிஎம்டபிள்யூ பைக்கில் வந்துள்ளார் என்ற செய்து தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் கடந்த சில மாதங்களாக அஜித் நடித்து வருகிறார். கொரோனா விவகாரத்திற்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது படபிடிப்பு முடிந்து அஜித் சென்னை திரும்ப வேண்டி இருந்ததால் அவருக்கு விமான டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.

Hyderabad to Chennai Ajith Thrill Ride1

ஆனால், அதை கேன்சல் செய்ய சொன்ன அஜித் பைக்கிலேயே சுமார் 600 கி.மீ தூரம் தனியாகவே சாலையில் பயணம் செய்து சென்னை வந்தாராம். இந்த தகவல் வெகு ரகசியமாக இருந்த நிலையில், தற்போது அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளனராம்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹியூமா குரேஷி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus