“வாழ்வில் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள்”- நாஞ்சில் விஜயன்!
August 5, 2020 / 12:46 PM IST
|Follow Us
சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.
பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள். இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவிலிருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.
இவர் ட்விட்டரிலிருந்து விலகிய மறுநாளே மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்து தான் ஏன் ட்விட்டரிலிருந்து விலகினார் என்று யாருக்கும் தான் பயப்படவில்லை என்றும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் தனக்கு வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் வனிதா குறித்து நடிகர் நாஞ்சில் விஜயன் தனது விமர்சனங்களை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வந்தது அனைவருக்குமே தெரிந்த விஷயம். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நாஞ்சில் விஜயனுக்கும் சூரிய தேவனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இதற்குப் பின்னர் சமீபத்தில் வனிதா நாஞ்சில் விஜயன் தனக்கு போன் கால் மூலம் மன்னிப்பு கேட்டதாகவும், தனக்கும் இந்த பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை என்று கூறியதாகவும், அதுமட்டுமின்றி மூன்றாவது நபர்கள் தேவையில்லாமல் இந்த பிரச்சினையில் அவரை இழுத்து விட்டதாக குறிப்பிட்டதாகவும், தன்மேல் தேவையில்லாமல் வழக்கு தொடர்ந்ததால் கோபத்தில் தன்னைப் பற்றிய தவறான வீடியோக்களை அவரது சேனலில் வெளியிட்டுள்ளதாகவும் அதை நீக்கி விடுகிறேன் என்று கூறி மன்னிப்பு கேட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார் வனிதா.
மேலும் இந்த போன் காலை தொடர்ந்து அவர் “நான் நாஞ்சில் விஜயனை மன்னித்து விடுகிறேன். இந்த பிரச்சினையில் சூர்யாதேவி தான் குற்றவாளி. தேவையில்லாமல் கஸ்தூரி தன் பப்ளிசிட்டிக்காக இதில் அனைவரையும் இழுத்து விட்டுள்ளார். ஒரு வளர்ந்து வரும் கலைஞனின் வாழ்வில் தேவையில்லாமல் இதுபோன்ற செய்திகள் வரத் தேவையில்லை. நான் அவர் வெளியிட்ட வீடியோ பற்றி குறிப்பிட்டு அவர் அதை நீக்கி விடுவதாகவும் கூறியுள்ளார். ஒரு பிரச்சனை வந்தால் அதை இருவர் பேசி முடித்துக் கொண்டால் சுலபமாக முடிந்துவிடும் மூன்றாவது நபர் தலையிட்டால் தான் அது பெரிதாகும் என்பதற்கு இதுவே உதாரணம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பற்றி தற்போது செய்தி வெளியிட்டுள்ள நாஞ்சில் விஜயன் “ஒரு சில பிரச்சினையை பேசி புரிய வைப்பதற்காக முயற்சித்தால் அதை நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று நீங்கள் உணர்ந்து கொண்டால் நீங்கள் மிகவும் பாவம். நீங்கள் வாழ்வில் இன்னும் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை” என்று பகிரங்கமாக பதிவிட்டுள்ளார். இதனால் வனிதா மற்றும் நாஞ்சில் விஜயன் இடையே தற்போது மீண்டும் சலசலப்பு நிகழ்ந்து வருகிறது.