இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அசுரன் . இந்த படம் பெரிய அளவில் பெற்றது . அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி வருகின்ற படம் . இந்த படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார் . எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . விஜய் சேதுபதி , இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் , ராஜீவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர் .
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் . எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது . மே மாதம் இந்தப்படம் வெளியாகும் என்று நம்பப்படுகிறது .
இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் மாணவர்களுடன் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் புகைப்பழக்கம் பற்றி மனம் திறந்துள்ளார் அதில் கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாளைக்கு 70 சிகரெட் அடிப்பேன் இயக்குநராக பணியாற்றும் போது 150 சிகரெட் அடிப்பேன் . இதனால் படங்களில் முழு கவனம் செலுத்த முடியமால் போனது . ஓடியாடி வேலை செய்ய முடியாமல் போன பிறகே சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்