கவர்ச்சியான பாத்திரம் ஏற்கமாட்டேன் – நடிகை ப்ரியா பவானி சங்கர்

  • May 13, 2020 / 12:42 PM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகிய பிரியா பவானி சங்கர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

மேயாதா மான் படத்தில் அறிமுகமான பிறகு, கார்த்தி நடித்த கடைகுட்டி சிங்கத்தில் நடித்தார். இப்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கரின் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

I wont take the Glamour route in Cinema - Priya Bhavani Sankar1

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில்,அல்ட்ரா கிளாம் இல்லாத பாத்திரங்களை செய்ய தான் விரும்புவதாக நடிகை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் சினிமாவில் குடும்ப பாங்கான கேரக்டர்களை ஏற்று நடிக்க விரும்புகிறேன்.எனது முகம் மற்றும் உடல் வாகு ஏற்ற பாத்திரங்களையே ஏற்பேன். ஒருபோதும் கவர்ச்சியான பாத்திரங்களை ஏற்று நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

மான்ஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து பொம்மாயில் எஸ்.ஜே. சூர்யாவுடன், பிரியா பவானி சங்கர் இணையவுள்ளார். இதைதொடர்ந்து விஷால், ஹரிஷ் கல்யாண் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் நடிக்கவுள்ளார். எஸ்ஜே சூர்யாவுடனானகல்யாண வதந்தியை தொடர்ந்து ப்ரியாவுக்கு தொடர்ந்து இறங்கு முகமாக இருப்பதாகவும் அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus