ஹாலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கீயானு ரீவ்ஸ். இவர் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஜான் விக்’. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததும், இதன் 2-ஆம் பாகம் 2017-யிலும், 3-ஆம் பாகம் 2019-யிலும் ரிலீஸானது.
இம்மூன்று பாகங்களுமே சூப்பர் ஹிட்டானது. கடந்த மார்ச் 24-ஆம் தேதி ‘ஜான் விக்’ படத்தின் 4-வது பாகம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை இயக்குநர் சாட் ஸ்டாஹெல்ஸ்கி இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பில் ஸ்கார்ஸ்கார்ட், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், இயான் மெக்ஷேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் இயான் மெக்ஷேன் ரூ.5.75 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.