விக்ரம் படத்தை ஹரி இயக்கி இருந்தால் இப்படி தான் இருக்கும் !

  • September 21, 2022 / 11:49 PM IST

2002-ஆம் வெளியான தமிழ் படத்தை இயக்கி கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ஹரி . இதன் பிறகு சாமி , கோவில் , அருள் ,ஐயா , அருள், தாமிரபரணி , வேல் ,சிங்கம் , என பல படங்களை இயக்கியவர் ஹரி . இவர் நடிகர் சூர்யாவை வைத்து ஆறு , வேல் ,சிங்கம் , சிங்கம் 2 , சிங்கம் 3 என ஐந்து படங்கள் இயக்கி உள்ளார் . இந்த ஐந்து படங்களும் மிக பெரிய வெற்றிகளை குவித்தது .

இந்நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் ஹரி ஆறாவதாக ஒரு படம் இயக்க இருந்தார் ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த படம் தொடங்காமல் போனது . இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தில் நடித்தார் . இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து படம் இயக்க தொடங்கினார் .

யானை என்ற தலைப்பை இந்த படத்திற்கு பெயர் வைத்தார் ஹரி. இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார் . ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகி பாபு , ஆகியோர் இந்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் .இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது விக்ரம் படத்தை ஹரி இயக்கி இருந்தால் இப்படி தான் இருக்கும் என்று ஒரு வீடியோ வெளியாகி உள்ளது . தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது .அந்த ஹரி படம் போல விறுவிறுப்பாக உள்ளது .ரசிகர்கள் அனைவரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் .

 

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus