90 -களில் முக்கியமான பிரபல நடிகராக இருந்தவர் சரத்குமார் . இவர் நடிகர் மட்டுமில்லை அரசியல்வாதியாகவும் இருக்கிறார் . தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 130 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்ற சிறந்த நடிகராக இருக்கிறார் .
நடிகர் சரத்குமார் முதலில் பாடிபில்டராக இருந்தார் பின்னர் பத்திரிகையாளர் பொறுப்பில் இருந்தார் . 1986 ஆம் ஆண்டு , சரத்குமார் தெலுங்கு திரைப்படமான சமாஜம்லோ ஸ்திரீயில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் முதலில் வில்லன் வேடங்களில் நடித்தார், பின்னர் துணை வேடங்களில் நடித்தார். அதன் பிறகு கதாநாயகனாக தமிழ் சினிமாவில் உயர்ந்தார் .
2007ல், கே.காமராஜரின் கொள்கைகளை நிறைவேற்றுவதாக கூறி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி (AISMK) என்ற புதிய அரசியல் கட்சியை தமிழகத்தில் தொடங்கினார். இவர் தென்காசி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். நடிகர் சங்கத்தின் தலைவராக 2006 முதல் 2015 வரை தொடர்ந்து மூன்று முறை பணியாற்றி இருந்தார் .
இந்நிலையில் சரத்குமார் தற்போது ஒரு அறிக்கை விற்றுள்ளார் அதில் நாம் மக்களுக்கு அதிகமாக சேவை செய்து கொண்டு இருந்த காலத்தில் சோசியல் மீடியா இருந்திருந்தால் நான் என்று முதலமைச்சர் .இதை துரதிருஷ்டமாக கருதவில்லை . இன்னும் 15 நாளில் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளேன் . சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் . என்னை பற்றி பெருமையாக பேசுகிறார்கள் அது மிகைப்படுத்துவது அல்ல என்றும் அவரது சமத்துவ மக்கள் கட்சி 15 ஆண்டுகள் இயங்குவதே சாதனை தான் என்று தெரிவித்துள்ளார் .