Ilaiyaraaja & Dhanush : இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

  • November 11, 2023 / 09:00 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது பிரபல இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜாவின் பயோபிக்காம்.

இதனை ‘கனெக்ட் மீடியா – மெர்க்குரி க்ரூப்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ளனர். படத்தை 2025-ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus