Bhavatharini & Ilaiyaraaja : இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரணி காலமானார்!

  • January 26, 2024 / 11:12 AM IST

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘இசைஞானி’ இளையராஜா. இவரின் மகள் தான் பிரபல பின்னணி பாடகி பவதாரணி. 1995-ஆம் ஆண்டு இளையராஜா இசையில் வெளியான ‘ராசய்யா’ படத்தின் மூலம் தான் பவதாரணி பாடகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு ‘அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, பாரதி, அழகி, ப்ரண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, தாமிரபரணி, கோவா, மங்காத்தா, அனேகன், மாநாடு’ போன்ற படங்களில் பவதாரணி பல பாடல்களை பாடி லைக்ஸ் குவித்திருக்கிறார். மேலும், இவர் ‘அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி, மாயநதி’ போன்ற படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.

தற்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரணி (வயது 47) சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus