ஸ்டாலின் முன்பு இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய மோடி !

  • November 12, 2022 / 11:23 AM IST

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் . ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி. பதவியும் வகிக்கிறார் .

தமிழ் திரைபிரபலங்கள் உட்பட பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர் . தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்திற்கும் , நடிகர் ராமராஜன் நடித்து வரும் சாமானியன் படத்திற்கும் இவர் தான் இசையமைத்து வருகிறார் .

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று (நவம்பர் 11) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உள்ளார் . இந்த நிகழ்ச்சி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நடைபெற்றது உள்ளது விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பங்கேற்று இருந்தார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus