தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களில் ஒருவரான வைகைப்புயல் வடிவேலு ஒரு காலகட்டத்தில் எந்த காமெடி காட்சியில் வந்தாலும் அது ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு வந்தது.
இவருக்கென தனி பாணி வைத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவரது நடிப்பில் வெளிவந்த பல டயலாக்குகள் இன்றுவரை மக்களிடையே பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காமெடி மீம்கள் செய்பவர்களுக்கு வடிவேலு வரம் என்றே கூறலாம். அப்படி ஒரு காலகட்டத்தில் மிகவும் அதிகமான வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் தான் “இம்சை அரசன் 23ம் புலிகேசி”.
இந்த திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார், சங்கர் பிரமாண்டமான முறையில் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். ஏற்கனவே இந்த படத்தின் அடுத்த பாகமான இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற படம் உருவாக்கப்பட்டு பின்பு பாதியில் கைவிடப்பட்டது.
இதற்கு வடிவேலு மற்றும் சங்கர் இடையிலான வாக்குவாதம் தான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது மீண்டும் இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் நடிகர் வடிவேலுவுக்கு பதில் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் சூரியை நடிக்க வைக்கலாம் என்று பேசப்பட்டு வருவதாகவும் தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்த படத்தில் சூரியை நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இதற்கு பேசாமல் இந்த படத்தை கைவிட்டு விடலாம் என்றும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.