முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.
இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, நடிகர் அஜித் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களும், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் புது மாடல் கார்களில் செல்வார்களாம். ஆனால், நடிகர் அஜித்தோ இன்னோவா காரில் தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்வாராம்.