பின்தங்கிய வாரிசு ! எந்த விஷயத்தில் தெரியுமா ?

  • December 28, 2022 / 07:05 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் உள்ளனர் . இரண்டு நட்சத்திரங்களின் படமும் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் பண்டிகை தினம் மாதிரி கொண்டாடி தீர்ப்பார்கள் . தற்போது வருகின்ற பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படம் ஒரே நாளில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன என்று செய்திகள் வெளியாகி உள்ளது .

இரண்டு பெரிய கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. தினம் தினம் சமூக வலைத்தளத்தில் தங்கள் நாயகர் படத்தின் அப்டேட்களையும் , பாடல்களையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் இரண்டு படங்களின் டிரைலர் பற்றின தகவல் வெளியாகி உள்ளது அதன்படி நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் டிரைலர் டிசம்பர் 31 -ஆம் தேதி வெளியாக உள்ளது என்றும் நடிகர் விஜய்யின் வாரிசு ஒரு நாள் கழித்து ஜனவரி 1 2023 அன்று வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus