வெளியானது இந்தியன் 2 படத்தின் மாஸான போஸ்டர் !

  • November 9, 2022 / 12:29 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் . விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைக்களுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மற்றும் ராம் சரண் 15 படத்தின் படப்பிடிப்பு இது இரண்டு படத்தின் படப்பிடிப்பையும் ஷங்கர் பார்த்து வருகிறார் . இந்நிலையில் இன்று உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் இயக்குனர் ஷங்கர் புதிய போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் . தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus