இந்தியன் 2 படத்திலிருந்து லீக்கான புகைப்படம்.

  • December 8, 2022 / 03:00 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் . விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைக்களுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்புலிருந்து புதிய புகைப்படம் கசிந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus