தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் ‘மோகன்தாஸ், FIR, ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘FIR’ படம் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை மனு ஆனந்த் இயக்க, முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், ரைசா, மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருந்த இதற்கு அஷ்வத் இசையமைத்திருந்தார், பிரசன்னா GK படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இந்த படத்தை விஷ்ணு விஷாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், நடிகர் விஷ்ணு விஷாலையும், இயக்குநர் மனு ஆனந்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் கூறி சென்னையிலுள்ள விஷ்ணு விஷாலின் வீட்டை முற்றுகையிட்டு இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் போராட்டம் நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.