பிரம்மாண்ட படத்தை கையில் எடுக்கும் சன் பிக்சர்ஸ் – வெளியான அதிரடி தகவல்!

  • May 9, 2020 / 07:32 PM IST

மிகபெரிய படமான இந்தியன் 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்2. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் இப்படத்தை லைகா நிறுவனம் கைவிட இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனால் தற்போது இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த தகவல் உறுதியாகி விட்டால் தமிழ் சினிமாவில் அஜித்தை தவிர மற்ற அனைத்து நடிகர்களின் படங்களும் சன் பிக்சர்ஸ் கையில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus