இன்று (ஜூன் 21-ஆம் தேதி) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடிகைகள் பலர் யோகா செய்யும் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். நடிகைகள் யோகா செய்யும் இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
1.நந்திதா :
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘அட்டகத்தி’.
தினேஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கியிருந்தார். ‘அட்டகத்தி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை நந்திதா ஸ்வேதாவுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி, புலி, உப்பு கருவாடு, அஞ்சல, உள்குத்து, அசுரவதம், தேவி 2, 7, டாணா, ஈஸ்வரன், கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை, IPC 376’ என தமிழ் படங்கள் குவிந்தது.
நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2.ஸ்ருதி ஹாசன் :
முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை அக்ஷரா ஹாசனின் அக்காவாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து கொண்டிருந்த ஸ்ருதி ஹாசனை ‘7-ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தது தமிழ் சினிமா.
‘7-ஆம் அறிவு’ படத்துக்கு பிறகு நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘3, பூஜை, புலி, வேதாளம், சி3, லாபம்’ என படங்கள் குவிந்தது. நடிகையாக மட்டுமின்றி இசையிலும் அதிக ஆர்வம் உள்ள ஸ்ருதி ஹாசன் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு சூப்பராக இசையமைத்து அசத்தினார்.
மேலும், பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களில் ‘அடியே கொல்லுதே, கண்ணழகா காலழகா, உன் விழிகளில், ஏண்டி ஏண்டி’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். இப்போது, நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் பிரபாஸின் ‘சலார்’ (கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி) மற்றும் ‘தி EYE’ என்ற ஆங்கில படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
3.பிரணிதா சுபாஷ் :
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே அருள்நிதியுடன் தான். அது தான் ‘உதயன்’. இந்த படத்தை இயக்குநர் சாப்ளின் இயக்கியிருந்தார். ‘உதயன்’ படத்துக்கு பிறகு நடிகை பிரணிதா சுபாஷுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ என தமிழ் படங்கள் குவிந்தது. பிரணிதா சுபாஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2021-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி பெங்களூரில் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை பிரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், நிதின் ராஜு – பிரணிதா சுபாஷ் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ‘ஆர்னா’ (ARNA) என பெயர் சூட்டியுள்ளதாக பிரணிதாவே இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.
4.ரகுல் ப்ரீத் சிங் :
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் டூயட் பாடிய ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் நடித்த ‘புத்தகம், என்னமோ ஏதோ’ போன்ற தமிழ் படங்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பெரிதாக க்ளிக் ஆகவில்லை.
அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ மற்றும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய இரண்டு படங்களும் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்புக்கு கோலிவுட் ஆடியன்ஸை லைக்ஸ் போட வைத்தது. இவ்விரண்டு படங்களுக்கு பிறகு ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தேவ், NGK’ என தமிழ் படங்கள் குவிந்தது. ரகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் கமலின் ‘இந்தியன் 2’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
5.ஷில்பா ஷெட்டி :
பாலிவுட் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் ஹிந்தியில் அறிமுகமான முதல் படம் ‘பாஸிகர்’. இதில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர்கள் அப்பாஸ் – முஸ்தான் இணைந்து இயக்கியிருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது.
‘பாஸிகர்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ஹிந்தி படங்கள் குவிந்தது. ஷில்பா ஷெட்டி தமிழில் ‘Mr.ரோமியோ’ என்ற படத்தில் நடித்திருந்தார். 1996-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யின் ‘குஷி’ படத்தில் ‘மேக்கரீனா’ என்ற பாடலில் மட்டும் நடனமாடியிருந்தார். ஷில்பா ஷெட்டி ஹிந்தி மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
6.மாளவிகா :
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் மாளவிகா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ஹீரோ அஜித் தான். அது தான் ‘உன்னைத் தேடி’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை மாளவிகாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக் கொடி கட்டு, சீனு, லவ்லி, சந்திரமுகி, திருட்டு பயலே, வியாபாரி, திருமகன், நான் அவன் இல்லை’ என தமிழ் படங்கள் குவிந்தது.
மாளவிகா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2007-யில் மாளவிகாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவரது கணவரின் பெயர் சுமேஷ் மேனன்.