கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 5’… வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாகப்போகும் ‘இரண்டாம் குத்து’ பட நடிகை!

  • October 12, 2021 / 05:07 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். பின், இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சாங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். தற்போது, பிரபல நடிகை ஷாலு ஷம்மு இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் வைல்ட் கார்ட் மூலம் நுழைய உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஷாலு ஷம்மு, அதன் பிறகு ‘தெகிடி, தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், றெக்க, Mr.லோக்கல், இரண்டாம் குத்து’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus