சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் வந்த வண்ணமுள்ளது. தமிழ் சினிமாவில் ஹாரர், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, ரொமாண்டிக், சைன்ஸ்-ஃபிக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, அடல்ட் காமெடி போன்ற ஜானர்களில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் அடல்ட் காமெடி ஜானரில் குறைவான படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது. தற்போது, தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2, முருங்கக்காய், பல்லு படாம பாத்துக்க, முருங்கைகாய் சிப்ஸ்’ என நான்கு அடல்ட் காமெடி ஜானர் படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது.
இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2’ படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் தான் இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். படத்தில் முக்கிய ரோல்களில் கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ஷாலு ஷம்மு, ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர் – சுவாமிநாதன், ‘பிக் பாஸ்’ டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பார்ட் 1 ஹிட்டடித்ததால், பார்ட் 2-வுக்கு எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருக்கிறது.
சமீபத்தில், இந்த பார்ட் 2-விற்கு ‘இரண்டாம் குத்து’ என டைட்டில் வைக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கெளதம் கார்த்திக் ட்விட்டரில் ரிலீஸ் செய்தார். இந்நிலையில், படத்தை வருகிற அக்டோபர் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.