தாய் இறந்த இரண்டாவது நாளில் மரணமடைந்த நடிகர்…!

  • April 29, 2020 / 12:48 PM IST

பிரபல நடிகர் இர்பான் கான் திடீர் மரணம்!தாய் இறந்த இரண்டு நாளில் மகனும் இறந்த சோகம்!

பிரபல பாலிவுட் நடிகரான இர்பான் கான் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 1988-இல் மீரா நாயரின் இயக்கத்தில் வெளியான “ஸலாம் பாம்பே” என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இவரது நடிப்பாற்றலால் பாலிவுடை தாண்டி ஹாலிவுட்டிலும் கால் தடம் பதித்தார். ஆஸ்கார் அவார்ட் வாங்கிய லைப் ஆப் பை மற்றும் ஜுராசிக் வேர்ல்ட், இனபெர்னோ போன்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மேலும் இர்பான் கானுக்கு புற்றுநோய் இருப்பது 2018ஆம் ஆண்டு கண்டறியப்பட்டு அவர் அதற்க்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்பொழுது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டதால் அவர் தனது சொந்த ஊரான ராஜஸ்தானிற்கு திரும்ப முடியாமல் மாட்டிக்கொண்டார்.

இந்நிலையில் இர்பான் கானின் தாயார் சயீதா, வயது 95 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உடல்நலம் சரியில்லாமல் வசித்து வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி 3 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த நிலையில் ஊருக்கு வர முடியாததால் தாயின் இறுதிச்சடங்கை வீடியோ அழைப்பின் மூலம் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் நடிகர் இர்ஃபான் கான். தனது தாயின் இழப்பினால் பெரும் மன அழுத்த பிரச்னைக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில் நடிகர் இர்பான் கானுக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் சற்றுமுன்பு சிகிச்சை பலனின்றி இர்பான் கான் காலமானார்!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus