இருமுகன் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறதா- தயாரிப்பாளர் விளக்கம்!

  • August 11, 2020 / 10:47 AM IST

2016-ஆம் ஆண்டு ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தமீஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் “இருமுகன்”. இந்த படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் நயன்தாரா நடித்திருந்தார்கள்.

ரசிகர்களிடையே வித்தியாசமான கதைகளத்திற்காக மிகவும் பேசப்பட்டு மக்களால் ரசிக்கப்பட்ட திரைப்படம் இருமுகன். இதுவரை இந்த படம் எந்த மொழியிலும் ரீமேக் செய்யப்படவில்லை. சமீபத்தில் “பிராஜெக்ட் பவர்” என்கிற ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

அந்த ட்ரெய்லரில் வரும் காட்சிகளை வைத்து இந்தப் படத்தின் கதை இருமுகன் படத்தின் கதையைப் போன்று உள்ளது என்றும் ஒருவேளை இருமுகன் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்திருக்கிறார்களா என்றும் பலவாறு கேள்வி எழுப்பப்பட்டது.

இருமுகன் படத்தில் போதை மருந்தை உட்கொள்பவர்களுக்கு 15 நிமிடம் அசாத்தியமான சக்தி கிடைக்கும் இதே போன்று காட்சிகள் அடுத்து நெட்பிலிக்ஸில் வெளியாகவிருக்கும் பிராஜெக்ட் பவர் திரைப்படத்திலும் அமைந்துள்ளதாம்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இருமுகன் படத்தின் தயாரிப்பாளர், இருமுகன் படத்தின் ரீமேக் உரிமையை எந்த ஒரு மொழிக்கும் விற்கவில்லை என்றும், இதன் மூலம் இரு முகன் படத்தின் பிராஜக்ட் பவர் ஒப்பீட்டை இணையதளங்களில் நிறுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

எனினும் இரு படங்களுக்கு உள்ள ஒற்றுமை இந்த போதை மருந்து மட்டும் தானா இல்லை வேறு ஏதாவது இருக்கிறதா என்று இந்த படம் வெளியானால் மட்டுமே தெரியும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus