அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’… பார்ட் 2-வின் டைட்டில் இது தான்!

  • September 8, 2020 / 03:30 PM IST

சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் வந்த வண்ணமுள்ளது. தமிழ் சினிமாவில் ஹாரர், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, ரொமாண்டிக், சைன்ஸ்-ஃபிக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, அடல்ட் காமெடி போன்ற ஜானர்களில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் அடல்ட் காமெடி ஜானரில் குறைவான படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது.

தற்போது, தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2, முருங்கக்காய், பல்லு படாம பாத்துக்க, முருங்கைகாய் சிப்ஸ்’ என நான்கு அடல்ட் காமெடி ஜானர் படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது. இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2’ படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் தான் இயக்கி, ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இதில் முக்கிய ரோல்களில் கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ஷாலு ஷம்மு, ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். பார்ட் 1 ஹிட்டடித்ததால், பார்ட் 2-வுக்கு எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், இந்த பார்ட் 2-விற்கு ‘இரண்டாம் குத்து’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus