24 படத்தின் இரண்டாம் பாகம் வருமா ?

நடிகர் சூர்யா நடிப்பில் 2016 -ஆம் ஆண்டு வெளியான படம் ” 24 “. இந்த படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்கி இருந்தார் . நடிகை சமந்தா , நித்யா மேனன் ஆகியோர் இந்த படத்தில் நாயகிகளாக நடித்து இருந்தனர். சரண்யா பொன்வண்ணன் , நடிகை அஜய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தனர் . திரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார் .2டி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது .

நடிகர் சூர்யா மூன்று கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார் . அதில் ஆத்ரேயா என்னும் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து இருந்தார் .படம் வெளியான தருணத்தில் இந்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . அறிவியல் புனைவு படமாக இந்த படம் உருவாகி இருந்தது . தமிழ் நாட்டில் பெரிய அளவில் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்றாலும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு பெற்றது . இதனால் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது .

இயக்குனர் விக்ரம் குமார் 24 படத்தின் இரண்டாவது பாகம் பற்றி பேசி உள்ளார். 24 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஐடியா இருக்கிறது . அதை 4 பக்கங்களில் எழுதி வைத்துள்ளேன் விரைவில் முழுக்கதையையும் எழுதிவிட்டு அதை படமாக்கும் பணியில் இறங்குவேன் என்று தெரிவித்துள்ளார் .

Share.