ரஷ்யாவில் வெளியாகும் தமிழ் படம் !

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் கைதி . இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் நரைன் நடித்து இருந்தார்.இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து இருந்தார் .சத்யன் சூரியன் இந்த இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரித்து இருந்தார்.

2019 -ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் வெளியானது . 32 கோடியில் எடுக்கப்பட்ட கைதி படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதித்தது . ஆக்‌ஷன் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் பாடல் இல்லை , கதாநாயகி இல்லை என்றாலும் சினிமா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தார்கள் . நடிகர் விஜய் நடித்த பிகில் படத்துடன் இந்த படம் வெளியாகி இருந்தது . இருந்தாலும் கைதி படம் 100 கோடி வசூல் செய்து சாதனை செய்தது.

இந்நிலையில் கைதி படம் ரஷ்ய நாட்டில் வெளியாகி இருக்கிறது என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார் .121 நகரங்களில் 297 திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது .

Share.