ஆர்யா படத்தில் மம்முட்டி நடிக்கிறாரா ?

  • June 11, 2022 / 07:11 PM IST

நடிகர் கமல்ஹாசன் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் ஒன்றை தயாரிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவை வைத்து முத்தையா இயக்கத்தில் படம் ஒன்றினை‌ தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன் பின் ஆர்யாவிற்கும் ராஜ்கமல் நிறுவனத்துக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி இருந்தது . இந்த காரணத்தினால் நடிகர் ஆர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இயக்குனர் முத்தையாவும் ராஜ் கமல் பட நிறுவனத்திடமிருந்து விலகி விட்டார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது . அந்த படத்தை தற்பொழுது அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள யானை படத்தை தயாரித்த நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . நடிகர் ஆர்யா தான் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.


ஆர்யா – முத்தையா கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் மம்முட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus