ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து, ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா நாசர்?… விளக்கமளித்த அவரது மனைவி கமீலா!

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாசர். இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படம் ‘கல்யாண அகதிகள்’. இந்த படத்தை இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகர் நாசருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. நாசர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்து கொண்டிருக்கும்போது நாசருக்கு விபத்து ஏற்பட்டு ICU-வில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நேற்று முதல் ஒரு செய்தி பரவி வருகிறது. தற்போது, இது தொடர்பாக நாசரின் மனைவி கமீலாவிடம் பேசுகையில் “ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் பாசி படர்ந்த பாறையில் நடக்கும்போது கீழே விழுந்து சின்ன சிராய்ப்புகள் தான் ஏற்பட்டது.

மருத்துவமனையில் டிடி ஊசி போட்டுக்கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். இப்போது அவர் நலமாக இருக்கிறார், மீண்டும் இன்று நடைபெறும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஆகையால், பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறினார்.

Share.