முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதியிலிருந்து லண்டனில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அஜித்தின் 63-வது படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் இயக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் அஜித் – நெல்சன் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.