போனி ஆகாத போனி கபூர் படம் !

  • November 5, 2022 / 02:06 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்து உள்ளது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது

இந்நிலையில் அஜித்தின் 61 வது படத்தின் தலைப்பு ” துணிவு ” என்று படக்குழு அறிவித்து இருந்தது .இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருந்தனர் . இந்நிலையில் நடிகர் அஜித் நடித்து வந்த தற்போது துணிவு படத்தின் படப்பிடிப்பு ( அக்டோபர் 11 ) முடிந்து உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது .இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் எஞ்சி உள்ளது .

இந்நிலையில் துணிவு படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . ஏற்கனவே 2023 பொங்கல் தினத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு படம் வெளியாக உள்ளது என்று வாரிசு படக்குழு அறிவித்து இருந்தது .

வாரிசு படத்தின் ப்ரீ ரிலீஸ் சிறப்பாக நடந்து வருகிறது . ஆனால் துணிவு படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸை யாரும் முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது . இதற்கு காரணம் நடிகர் அஜித்தின் முந்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது தான் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus