தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா அஜித் படம் ?

  • June 21, 2022 / 11:55 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருக்கிறது . தற்போது மஞ்சு வாரியர் நடிக்கும் காட்சிகளை எடுத்து வருகிறார் இயக்குனர் வினோத் . இந்நிலையில் இந்த படத்தை தீபாவளிக்கு திரையிடலாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர் திட்டத்தில் இருந்தார் ஆனால் தற்போது படப்பிடிப்பு முடிய இன்னும் சில மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது இதனால் இந்த படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று செய்தி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus