ஜனனி வாய்ப்பை பறித்த அமுதவாணன் ?

  • January 2, 2023 / 09:24 AM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 80 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று முதல் முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் அமுதவாணன் .

இந்நிலையில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடந்து வந்தது . ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த டாஸ்க் இது தான் . போட்டியாளர்களின் குடும்பத்தினர் இந்த டாஸ்கில் பங்கேற்றனர் . இரண்டு தினங்களுக்கு முன் இந்த டாஸ்க் நிறைவுப்பெற்றது . தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அமுதவாணன் மற்றும் அஸிமிடையே

கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . இதனால் இன்றைய எபிசோடில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பலாம் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus