நடிகர் விஜய்யுடன் இணையும் மிஷ்கின் ! மாறன் மாஸ் காம்போ இது தான் !

  • October 27, 2022 / 04:28 PM IST

நடிகர் விஜய் நடித்து வரும் படமான வாரிசு படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது. அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்தது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது . இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் தனது 67 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் 6 வில்லன் கதாபாத்திரம் இருக்கிறது என்றும் மலையாள நடிகர் பிரித்திவிராஜ் , பாலிவுட் நடிகர் சஞ்சய் டட், கவுதம் வாசுதேவ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்யின் 67 படத்தின் செட் பணிகள் மூணாறில் நடந்து வருகிறது . இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது . இதனால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus