தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லீ . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் பிகில் . அட்லீ தற்போது நடிகர் ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.
முதன்முறையாக அட்லீ இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நயன்தாராவும் இந்த படத்தில் நடித்து வருகிறார் . இது ஒரு பக்கம் இருக்க ‘ஜவான்’ படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் 2006-ஆம் ஆண்டு வெளியான ‘பேரரசு’ படத்தின் கதை எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்து உரிய விளக்கம் அளிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.” என்ற தகவல் வெளியாகி உள்ளது .
வழக்கமாக இயக்குனர் அட்லீயின் படம் வெளியான பிறகு தான் சர்ச்சையில் சிக்கும் உதாரணமாக ராஜா ராணி’ படம் ‘மௌன ராகம்’ படத்தைப் போல் இருப்பதாகவும் ‘மெர்சல்’ படம் ‘மூன்று முகம்’ படம் போல் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்து இருந்ததன . அட்லீயின் ஒவ்வொரு படத்திற்கும் படம் வெளியான பிறகு சர்ச்சை எழுவது வழக்கம் ஆனால் தற்போது படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே சர்ச்சையில் சிக்கி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது .