பீஸ்ட் படம் எப்படி இருக்கிறது?

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது பீஸ்ட் படம். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று படம் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு பெரிதாக இன்ட்ரோ இல்லை என்று கருதுகிறார்கள். மேலும் இந்த படத்தில் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார் அவரது நடனம் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள் . இந்த படத்துக்காக போடப்பட்ட மால் செட் அனைவரையும் கவர்ந்துள்ளது. அனைத்து சண்டைக்காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

நெல்சன் படத்தில் பொதுவாக காமெடி காட்சிகளுக்கு ரசிக்கும்படியாக இருக்கும் . ஆனா இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும்படி இல்லை என்று ரசிகர்கள் கருதுகிறார்கள் .படம் முழுக்க இந்த இடம்பெற்ற ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த ஆக்‌ஷன் காட்சிகளே சிலர்க்கு வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது . மேலும் அரபிக் குத்து பாடலை ரசிகர்கள் திரை அரங்கில் கொண்டாடி வருகின்றனர். VTV கணேஷ் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

மொத்தத்தில் பீஸ்ட் படம் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் விதமாகவும் மற்ற ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையும் அளித்துள்ளார் நெல்சன்.

Share.