பேட்டி கொடுத்தது ஒரு குற்றமா ? மாட்டிக்கொண்ட பிக் பாஸ் அஸீம் !

  • February 13, 2023 / 07:55 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இறுதி வாரத்தில் மக்கள் வாக்கின் அடிப்படையில் மூன்றாவது இடத்தை ஷிவினும் , இரண்டாவது இடத்தை விக்ரமன் வென்றுள்ளனர் . போட்டியாளர் அஸிம் அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை வென்று இருந்தார் அஸிம்.

இந்நிலையில் அஸிம் பிக் பாஸ் பட்டத்தை வென்ற பின் பல ஊடங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது . அதில் அவர் பிக்பாஸ் வீட்டில் கோபமாக பேசுவதை பார்க்கும் அவரின் மகன் என்ன நினைப்பார் என எழுந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அவர் கூறியிருப்பதாவது, ஏண்டா டேய் என் மகனுடன் நான் பல நேரங்களில் நேரம் செலவழித்து இருக்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து தான் என்னுடைய மகன் வளர வேண்டும் என்ற அவசியமே இல்லை என காட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அஸீமுக்கு அறிவுரை கூறும்போது உங்கள் மகன் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று அறிவுரை கூறி வந்தார். அந்த வகையில் தற்போது அசீம் இப்படி மரியாதை இல்லாமல் பேசி இருப்பது கமலை மனதில் வைத்து தான் என கூறும் ரசிகர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து அஸீம் விளக்கம் அளித்துள்ளார் அதில் ” சமீபத்தில் ஒரு நேர்காணலில் நான் கூறியது, கமல் சாரின் அறிக்கையை (எனக்காக நிகழ்ச்சியில் கொடுத்தது) பரப்பி, அதை தவறாகப் பயன்படுத்துபவர்கள் “எதிர்மறையான நபர்களை” மட்டுமே நோக்கமாகக் கொண்டது. கமல் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, அது என்றும் மாறாது. அவரது வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள நான் எப்போதும் தயாராக இருப்பேன், அது இறுதியில் என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் & அவர் எனக்கு ஒரு தந்தையின் உருவம் போன்றவர். எனவே இதை விரும்பாத சிலர் செய்யும் பதிவிட்டுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus