‘பாகுபலி, RRR’ படங்களின் இயக்குநர் ராஜமௌலி, ரமாவின் இரண்டாவது கணவரா?

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘பாகுபலி 1 & 2’வின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்துள்ளாராம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட மாஸான ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்க ப்ளான் போட்டுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

ராஜமௌலி 2001-ஆம் ஆண்டு ரமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜமௌலி இயக்கிய பல படங்களுக்கு ரமா காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியிருக்கிறார். ரமா அவரது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகே, ராஜமௌலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாராம்.

Share.