தளபதி 66 படத்தில் நடிக்கும் இரண்டாவது நாயகி யார் ?

  • May 28, 2022 / 02:04 AM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது .நடிகர் விஜய் சென்னை திரும்பிவிட்டார் .

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்தின் கதை வலுவாக இருக்கிறது என்று சமீபத்தில் நடிகர் சரத்குமார் தெரிவித்து இருந்தார் .

இசையமைப்பாளர் தமன் முதன் முதலாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் . பொதுவாக நடிகர் விஜய் நடிக்கும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் எனவே தமன் இசை மீது அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் .

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு கதாநாயகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . அந்த வேடத்தில் நடிக்க தனுஷின் பட்டாசு படத்தின் நாயகி மெஹ்ரின் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதை பற்றின அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus