ரகசியத்தை போட்டு உடைத்த ஃபகத் பாசில் !

  • January 24, 2023 / 07:41 PM IST

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சில தினங்களுக்கு முன் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் . த்ரிஷா இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் .

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது இதனை இருவருமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர் . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது .

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஃபகத் பாசிலிடம் விஜய் 67 படத்தில் நீங்க நடிக்க போறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதில் அளித்த ஃபகத் பாசில் விஜய் 67 லோகேஷ் யுனிவெர்சின் கீழ் வந்தால் நிச்சயம் நான் விஜய் 67 -ல் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் . இதனால் ரசிகர்கள் விஜய் 67 படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus