தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் . சமீபத்தில் இவரது வாரிசு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .
வாரிசு படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடந்தது . பொதுவாக விஜய்யின் படத்தின் அனைத்து விழாக்களிலும் விஜய்யின் மனைவி பங்கேற்பார் . ஆனால் இந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்கவில்லை . மேலும் அதற்கு முன் நடந்த இயக்குனர் அட்லீயின் மனைவியின் வளைகாப்பு விழாவிலும் விஜய் மனைவியுடன் வருமானால் தனியாக பங்கேற்று இருந்தார் .
இதை எல்லாம் வைத்து விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வாழவில்லை என்றும் இருவரும் விவாகரத்து ஆகப்போகிறது என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பேசிவருகின்றனர் . இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தான் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு சென்று இருக்கிறார். எப்போதும் கணவர் குழந்தைகளுடன் பண்டிகை தினங்களை கொண்டாடி வரும் சங்கீதா இந்த வருடம் தன் அப்பாவின் அழைப்பை ஏற்று அங்கு சென்று இருக்கிறார்.
மேலும் நடிகர் விஜய்யும் வாரிசு இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் தனது மனைவியை காண சென்றுவிட்டார் என்று கூறப்பட்டது .
இந்நிலையில் இது தொடர்பாக விநியோகஸ்தர் கோபி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த விவாகரத்து செய்தியை முற்றிலும் பொய் என கூறியுள்ளார். இதுபோன்ற செய்தியை கிளப்புபவர்கள் அவர்களது குடும்பத்தில் பெண்கள் இருக்கிறார்கள்,, இந்த கர்மா அவர்களை வேறொரு ரூபத்தில் வந்து தாக்கும் என பதிவு செய்துள்ளார்.