கவுண்டமணி மீண்டும் நடிக்க வருவது உண்மையா ?

  • July 23, 2022 / 02:45 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டான் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார் . மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.

டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது . இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ” பிரின்ஸ் ” படத்தில் நடிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.காரைக்கால் , பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது . வருகின்ற தீபாவளிக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது .

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தின் தலைப்பு மாவீரன் என்று அறிவித்து இருந்தனர் . தற்போது இந்த படத்தில் ஒரு காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கவுண்டமணி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . மாவீரன் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் தீயாக பரவி வந்த நிலையில் தற்போது இது முற்றிலும் பொய்யான தகவல் என்று தெரிய வந்துள்ளது . மேலும் நடிகர் கவுண்டமணி இந்த செய்தி எனக்கே இப்பதான் தெரியும் என்று நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார் .

இதனால் மாவீரன் படத்தில் கவுண்டமணி நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus