படமாகும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை சம்பவம் !

  • September 30, 2022 / 04:47 PM IST

நடிகர் , தயாரிப்பாளர் , அரசியல்வாதி என தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் . 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் .

அதன் பிறகு 2012-ஆம் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த படத்தில் சந்தானத்துடன் இவர் இணைந்து செய்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து இருந்தார் .ஆனால் அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை . மனிதன் மற்றும் சைக்கோ ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன .

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி என்கிற படம் இவர் நடிப்பில் வெளியாகி இருந்தது . இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார் . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் உதயநிதி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்கிற படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது .

இந்நிலையில் நடிகர் உதயநிதி அடுத்து ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்தை கிடாரி படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்க உள்ளார் . இந்நிலையில் அந்த படத்தின் கதை பற்றி தகவல் வெளியாகி உள்ளது . அதில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கையை தான் படமாக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது . மிசா காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் சிறைக்கு சென்ற கதையை படமாக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது . இது தொடர்பான அறிவிப்பு பிக் பாஸ் சீசன் 6 இல் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus