கமல் தயாரிப்பில் விஜய் மற்றும் சூர்யா !

நடிகர் கமல்ஹாசன் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்துள்ள விக்ரம் படத்தையும் அவரே தயாரித்துள்ளார்.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம்‌ 3ஆம் தேதி வெளியாகிறது.

இதனை‌ தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் ஒன்றை தயாரிக்கிறார் நடிகர் கமல் ஹாசன் . அந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் . இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார் .

இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவிடம் ராஜ் கமல் நிறுவனம் கால் ஷீட் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . மேலும் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் ராஜ் கமல் நிறுவனத்தில் நடிக்க தயாராக தெரிவித்துள்ளனர் . விரைவில் இந்த இரண்டு நடிகரும் கமல்ஹாசனுக்கு தங்களது கால்ஷீட்டை தருவார்கள் என்று கூறப்படுகிறது .

இது தவிர நடிகர் “ஜெயம் ரவி “ராஜ் கமல் நிறுவனத்தில் நடிக்க கால்ஷீட் தந்துள்ளார் என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது. மேலும் பல முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து படம் தயாரிக்க உள்ளார் நடிகர் கமல்ஹாசன் .

Share.