கார்த்தியுடன் இணைகிறாரா தனுஷ்?

நடிகர் கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன்.
இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா மற்றும் ரீமாசென் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார் . நடிகர் பார்த்திபன் அவர்களின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த படம் வெளியான நேரத்தில் இந்த படத்திற்கு பெரியதாக வரவேற்பு இல்லை . ஆனால் படம் வெளியாகி பல வருடம் கழித்து ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட ஆரம்பித்தார்கள் . இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என்று அனைவரும் மிகவும் எதிர் பார்ப்புடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும் அது 2024ம் ஆண்டு வெளியாகும் என தெரிவித்தார் . இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இதனால் இரண்டாம் பாகத்தில் நடிகர் கார்த்தி இல்லை என்று அனைவரும் நினைத்தனர் . கார்த்தி ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை தந்தது . இந்நிலையில் இயக்குனர் செல்வா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் கார்த்தி இருப்பதை உறுதி செய்துள்ளார்.

இரண்டாம் பாகத்தில் கார்த்தி மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து நடிப்பது உறுதியாகி உள்ளது.

Share.