கார்த்திக்கு வில்லனாகும் முன்னணி நடிகர் !

  • May 14, 2022 / 10:48 AM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது . விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி சார்த்தர் படத்தில் நடித்து வருகிறார். பி.எஸ். மித்ரன் இந்த படத்தை இயக்கி வருகிறார் .கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் . ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி . இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 24-வது படத்தின் செய்தி வெளியாகி இருக்கிறது .

குக்கூ , ஜோக்கர் , ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் கார்த்தியின் 24 வது படத்தை இயக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது .மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி மற்றும் கார்த்தி ஒரே கதையில் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus