கார்த்தி எடுக்கும் புதிய அவதாரம் !

  • November 21, 2022 / 12:21 AM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் சர்தார் . இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . ராஷி கண்ணா , ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் . மேலும் நடிகை லைலா முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது .

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 25 படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது .
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜப்பான் என்று தலைப்பு வைத்துள்ளனர் . குக்கூ , ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் இந்த படத்தை இயக்கி வருகிறார் . அனு இம்மானுவேல் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

தற்போது ஜப்பான் படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது . நடிகர் கார்த்தி ப்லே பாய் பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் சற்று நெகட்டிக் பாத்திரமாக இந்த கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது .
.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus